வியாழன், நவம்பர் 16, 2017

வாழ்விற்கு விடை காண முற்பட்டால்!

வாழ்விற்கு விடை காண முற்பட்டால்!

அல்லாஹ் இவ்வுலகில் மனிதர்களை ஒரு குறிக்கோளோடு படைத்திருக்கிறான். “நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை. 51:56” லும் “உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காகவே அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். என்று 67:2 லும் அந்தக் குறிக்கோளை தெளிவு படுத்தியும் உள்ளான். எனவே உலகில் பிறந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ‘நாம் யார்?’ எங்கிருந்து வந்தோம் எங்கே போகப் போகிறோம்? நமது இறுதி முடிவு என்ன? அது யார் கையில் இருக்கிறது? இவை போன்ற கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு விடை காண முற்பட்டால் அவர்களது வாழ்வில் நிச்சயம் ஒளி பிறக்கும். “கண்டதே காட்சி கொண்டதே கொள்கை” என்று தான் தோன்றித்தனமாக வாழ்க்கை வாழ ஒரு போதும் முற்படமாட்டார்கள்.

வெள்ளி, நவம்பர் 10, 2017

மரணம் முதல் மறுமை வரை [படிப்பினை தரும் ஒரு அருமையான கட்டுரை...]

மரணம் முதல் மறுமை வரை
படிப்பினை தரும் ஒரு அருமையான கட்டுரை...
மரணம்:
உயிர்ப் பெற்ற ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை அடைந்தே தீர வேண்டும் என்பது உலக நியதி. ஒரு மனிதன் ஜனித்த நாள் முதல் ஒரு குறிபிட்ட நாள் வரைதான் அவனால் இப்பூமியில் உயிர் வாழ முடியும், அதன் பிறகு மரணமடைந்தே ஆக வேண்டும். அருள்மறை திருகுர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

ஒவ்வொர் ஆத்மாவும் மரணத்தைச் சகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்கள் (செய்கைக)ளுக்குறிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (3:185)

சனி, அக்டோபர் 28, 2017

சின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள்

சின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள்
அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் நம்பிக்கை மட்டும் போதாது. அத்துடன் நல்ல செயல்களும் அவசியம். இதைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்? (அல்குர்ஆன் 4:122)

வெள்ளி, அக்டோபர் 27, 2017

விட்டுக் கொடுக்கும் தன்மை

விட்டுக் கொடுக்கும் தன்மை
முஸ்லிம்களிடத்தில் இது குறைந்து வருவதனால் தான் இன்று நம்மிடையே பகைமை உணர்வுகள் அதிகம் ஏற்பட்டு பல பிணக்குகளும் பிரிவுகளும் உண்டாகியிருக்கின்றன. இதில் வேதனையான விசயம் என்னவென்றால் குர்ஆன், ஹதீஸ் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் தான் இத்தகைய விட்டுக்கொடுக்கும் தன்மை சிறிதும் அற்றவர்களாக அதிகம் காணப்படுகின்றனர். இவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு பலியாகி அவனின் மாயவலையில் விழுந்திருக்கிறார்கள்.

சனி, அக்டோபர் 21, 2017

தீய குணங்கள்...........

தீய குணங்கள்...........


1 . தற்பெருமை

(நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)

நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)