செவ்வாய், செப்டம்பர் 19, 2017

தாயைவிடக் கருணையுள்ள இறைவன், தனக்கு இணை வைப்பதற்காக தண்டிப்பாரா ?



இறைவனுக்கு இணை வைப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்பதை நாம் எடுத்துக் கூறிய போது ஒரு சகோதரர், "தாயைவிடக் கருணையுள்ள இறைவன் தனக்கு இணைவைப்பதற்காக தண்டிப்பாரா? இது முரணாக இருக்கிறதே!" என்று கேட்டார்.
தன்னை வணங்கா விட்டாலும் இந்த உலகில் அவனுக்கு தேவையான உணவை, நீரை, காற்றை வாழ்வாதாரங்களை வழங்குவதில் தாயினும் கருணை காட்டும் இறைவன்!
நியாயத் தீர்ப்பு நாளில் தான் வகுத்த விதிக்கு கட்டுப் பட்டு தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இருக்கிறான்! 
மகன் குற்றவாளி என்பதனால் நீதிபதியான தாயிடம் கருணை காட்ட சொல்வது சரியாகுமா? 

வியாழன், ஆகஸ்ட் 24, 2017

அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!

அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!

1. நீங்கள் தான் உங்கள் வீட்டின் வாசனை. கணவன் வீட்டினுள் நுழைந்த உடன் நீங்கள்தான் முதல் வாசனை என்பதை கணவருக்கு உணரச் செய்யுங்கள். நல்ல மணமுடன் எப்போதும் இருங்கள்.


கணவனுடனான தொடர்ச்சியான கலந்துரையாடலை பேணிக்கொள்ளுங்கள். வாதாட்டம், தங்களது கருத்தில் பிடிவாதம் போன்றவற்றை தவிர்த்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு ஷரிஅத் விதித்துள்ள பொறுப்புகளை விளங்கி கொள்ளுங்கள். பெண்களுக்கு இயல்பாக இருக்க கூடிய விடயங்களை ஷரீஅத் தங்களுக்கு வழங்கியுள்ளது.

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

கவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ...

கவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ...

அந்த இளைஞனின் முகத்தில் அளவுக்கு மீறிய சோகம். துள்ளித்திரிய  வேண்டிய வயதில் , பட்டாம் பூச்சியாய் பாடித் திரிந்து மகிழ வேண்டிய பருவத்தில் இதென்ன துயரம்?  இளமையின் வசீகரத்தால் ஒளிரவேண்டிய அழகு முகத்தில் ஏன் கவலைக் கோடுகள்?

பக்கத்து வீட்டுப் பெரியவருக்கு மனம் தாளவில்லை . அந்த இளைஞனை அன்புடன்  அழைத்தார்  .   ''தம்பி , ஏன் ஒருமாதிரியாக இருக்கிறாய்? இளமைக்குரிய  துள்ளலோ , உற்சாகமோ உன்னிடத்தில் காணப்படவில்லையே  ! ஏதேனும் கவலைகளா ?
பெரியவரின் அன்பான மொழி கேட்ட மறுவினாடியே அந்த இளைஞன் அழுது விடுவான் போலிருந்தது , அவனுடைய கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்பினான். சற்றுநேரம் கழித்து அவனே பேசத் தொடங்கினான்.

சனி, ஆகஸ்ட் 19, 2017

துஆ இது ஒரு சிறந்த வணக்கம்! [அவசியம் படியுங்கள் நல்ல உள்ளங்களே !]

துஆ இது ஒரு சிறந்த வணக்கம்!  [அவசியம் படியுங்கள் நல்ல உள்ளங்களே !]

[ஓரிறை நம்பிக்கை கொண்டவர்களே ] உங்களுடைய ரப்பை பணிவாகவும் [தாழ்ந்த குரலில் ] மெதுவாகவும் நீங்கள் பிரார்த்தியுங்கள்.
அல்குரான் ]

அச்சத்தோடும் ஆசையோடும் அவனையே நீங்கள் அழையுங்கள்.
[அல்குரான்]

''துஆ வணக்கத்தின் [மூளை] சாரமாகும்'' என்று நபி [ஸல்] அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்- திர்மிதீ ]

திங்கள், ஆகஸ்ட் 14, 2017

அண்ணலார் கூறிய அழகிய உவமைகள் ...

அண்ணலார் கூறிய அழகிய உவமைகள் ...
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
மலருக்கு மனம் அழகு ! மங்கைக்கு நாணம் அழகு! மொழிக்கு உவமை அழகு!
உவமைகள் இல்லாத மொழி ஊமை மொழி  என்று துணிந்து சொல்லி விடலாம்..

தமிழைத் போலவே அரபியும் தொன்மையான மொழிகளில் ஒன்று .

இறைத்தூதர் கூறிய இனிய உவமைகள் இரண்டை மட்டும் இங்கு எடுத்துக் கொள்வோம்.
 இந்த உலகில் தாம் இறைத்தூதராய் அனுப்பப்பட்டதின் நோக்கம் குறித்தும் தம்முடைய பணி எத்தகையது  என்பதையும் எவ்வளவு அழகாகச் சொல்கிறார்கள்  பாருங்கள்!