வாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மே 08, 2016

வாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை.

இன்ஷாஅல்லாஹ் இன்னும் சில நாட்களில்
ரமலான் நம்மிடம் வரயிருக்கிறது!
அந்த ரமலானை கண்ணியமாக வரவேற்று!
கண்ணியமாக வழியனுப்ப வேண்டும்!

வாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின்  நிலை. வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின்  நிலை.
அல்லாஹ்வின் திருபெயரால்..
ஒரு வீட்டின் உரிமையாளரிடம் சென்று ஒருவர் தமக்கு வாடகைக்கு வீடு வேண்டுமென்று அந்த வீட்டில் தாம் குடியிருக்கப்போவதாகவும் கேட்டுக் கொண்டார். அவ்வீட்டின் உரிமையாளர் அவர் கேட்டுக் கொண்டபடி ஒரு வீட்டை வாடகைக்காக கொடுத்து அவ்வீட்டிலேயே குடியிருக்கும்படி ஏற்பாடு செய்து கொடுத்து அவரிடம் சொன்னார், ''இந்த வீடு வாடகை வீடுதான். இந்த வீட்டிலிருந்து என்றோ ஒரு நாள் வெளியேறும்படி வரும். ஆனால் எந்த முன் அறிவிப்பும் கொடுக்கப்படாமல் திடீரென்று வெளியேற்றப்படும். அதற்குத் தகுந்தபடி உன்னுடைய வாழ்க்கையை அமைத்துகொள்,, மறந்துவிடாதே !

இந்த வீடு வாடகை வீடுதான் தற்காலிகமாகத் தங்குவதற்காக வேண்டிதான் தரப்பட்டிருக்கின்றது'' என்று அறிவிப்புச் செய்து அவ்வீட்டை ஒப்புக்கொடுத்தார். அம்மனிதரும் அவ்வீட்டில் குடியிருந்து வந்தார். ஆனால் நாளாக , நாளாக அந்த வீடு வாடகை வீடு என்பதை மறந்து தமக்கு வரக்கூடிய வருமானம் அனைத்தையும் அவ்வீட்டை அலங்கரிப்பதிலேயே செலவ செய்து வந்தார். அவருக்கு சொந்த வீடு ஒன்று இருந்தது. ஆனால் அந்த சொந்த வீட்டைப் பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை.