முஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், செப்டம்பர் 27, 2017

முஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும்

முஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும்
முஸ்லிம்களில் சிலர் முஹர்ரம் 10 வந்துவிட்டால், அந்த நாளில் என்னசெய்ய வேண்டுமென்று மார்க்கம் சொல்லியிருக்கிறது என்றெல்லாம் பார்ப்பதில்லை காலம் காலமாக நடைமுறையில் என்ன உள்ளதோ அல்லது ஆலிம்சாக்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்து நன்மைக்கு பதிலாக அல்லாஹ்விடம் பாவத்தை பெற்றுக் கொள்வதை பார்க்கிறோம்.

சில பகுதிகளில் முஹர்ரம் 10 அன்று கொழுக்கட்டை சுட்டு, வீடுவாசலை நன்றாக கழுவிவிட்டு ஆலிம்சாவை கூப்பிட்டு பாத்திஹா ஓதிவிட்டால் கடமை முடிந்தது என்ற பழக்கம் இருந்தது. அல்லாஹ்வின் பேரருளால் தற்போது இந்த பித்அத் குறைந்துள்ளது. எனினும், முழுமையாக ஒழியவில்லை.