நோன்பு திறத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோன்பு திறத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூன் 02, 2016

நோன்பு திறத்தல்



நோன்பு திறத்தல்

    நோன்பு திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை குர்ஆன், ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அவற்றை ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.

1. நோன்பு திறக்கும் நேரம்:

    'பின்னர் இரவு வரை நோன்பை முழுமையாக்குங்கள்' (அல்குர்ஆன் 2:187)

    '....நீங்கள் இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்' என்று தமது விரலால் கிழக்கே சுட்டிக் காட்டி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃப் (ரலி), நூல்: புகாரி 1956)