நிதானம் எனும் அழகிய பண்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிதானம் எனும் அழகிய பண்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், நவம்பர் 25, 2015

நிதானம் எனும் அழகிய பண்பு

நிதானம் வேண்டும்!

தானம் கொடுக்க வேண்டும்!
நாணம் இருக்க வேண்டும்!
அல்லாஹ்வின் திருபெயரால் ..........
தானத்திலே சிறந்து நிதானம் என்று பழமொழி கூறுவார்கள்!
மாலை நேரம். அலுவலகத்திலிருந்து களைத்துப்போய் வீடு திரும்புகிறீர்கள். சிடுமூஞ்சி மேலாளருடனும், முடிவு இல்லாத கோப்புகளுடன் மல்லுகட்டிவிட்டு எரிச்சலுடன் வருகிறீர்கள்.

உங்கள் அன்பு மனைவி முகம் கழுவி, தலைவாரி, பளிச்சென்று உடை உடுத்தி , புன்னகை தவழும் முகத்துடன் உங்களை அன்போடு வரவேற்று, உங்கள் களைப்பு தீர காப்பியும், சிற்றுண்டியும் பரிமாறுவாள் என்ற எதிர்பார்ப்புடன் வருகிறீர்கள்.

ஆனால் வீட்டுக்குள் நுழைந்ததுமே உங்கள் எரிச்சல் இன்னும் பல மடங்காய் எகிறுகிறது. வீடு முழுக்க ஒரே குப்பை! துணிமணிகள் எல்லாம் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. தலைமுடி களைந்து, ஓர் அழுக்குப் புடவையுடன், வேர்க்க விருவிருக்க உங்கள் மனைவி சமையல் அறையில் எதோ வேலையாக இருக்கிறார். குழந்தை ஒருபக்கம் அழுத கொண்டிருக்கிறது. எதுவுமே ஒழுங்கில்லை.