தனியாக பெண்மணி பிரயாணம் செய்வது ஹராமாகும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனியாக பெண்மணி பிரயாணம் செய்வது ஹராமாகும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, நவம்பர் 17, 2012

இஸ்லாமிய இளம்சகோதரிகளே அறிந்துகொள்ளுங்கள்!!!

இஸ்லாமிய இளம்சகோதரிகளே அறிந்துகொள்ளுங்கள்!!!www.islam-bdmhaja.blogspot.com
தனியாக பெண்மணி பிரயாணம் செய்வது ஹராமாகும் .
ஒரு ஆண்ணும் பெண்ணும் இருந்தால் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் ,அவன் இருந்தால் என்ன நடக்கும் என்பதை சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை நமக்கு! புரிந்த்துகொள்ளுவோம் !
மேலே உள்ள கருத்து :நபிமொழி கருத்து.
காதல் என்ற பெயரால் சீரழியும் நம் சமுதாய பெண்கள் ,கொஞ்சம் கவனமாக அல்லாஹ் வின் தூதர் ,அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை தெரிந்துகொள்ள வேண்டும் !

ஹதீஸ்கள்:

நபி (ஸல்) நவின்றதாக ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் :
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்ட பெண்மணி தம்முடன் (தந்தை ,சகோதர்கள் ,மகன்கள் ,மாமுமார்கள் போன்ற) மஹ்ரமான (திருமணம் முடிக்க விலக்கலான )உறவினர் இருந்தாலே தவிர ஒரு பகல் ,ஒரு இரவு பயணம் செய்யும் தொலை தூரத்திற்கு (தனியாக)பயனமாகுவது கூடாது.
                                                                     ஆதாரம் :(புகாரி,முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் செவிமடுத்ததாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:ஒரு ஆண் ,ஒரு அன்னிய பெண்ணுடன் அவளது மஹ்ரமான  உறவினர் உடன் இருந்தாலே தவிர ,தனிமையில் இருக்க மாட்டான் .ஒரு பெண் தன்னுடன் மஹ்ரமான உறவினர் உடன் இருந்தாலே தவிர பிரயாணம் செய்ய மாட்டாள் .அப்பொழுது ஒரு மனிதர் யா ரசூலல்லாஹ் !என் மனைவி ஹஜ்ஜூக்காக புறப்பட்டு விட்டாள் ;என் பெயர் இன்ன இன்ன போர்களில் கலந்து கொள்வதற்காக எழுதப்பட்டு விட்டது என்று  கூறினார் .அதற்க்கு நபி (ஸல்) அவர்கள் ,நீர் செல்வீராக !உம மனைவியுடன் சேர்ந்து ஹஜ் செய்வீராக! எனப் பகந்தார்கள்.  ஆதாரம்:புகாரி,முஸ்லிம்)


இன்றயகாலத்து இளம்பெண்கள் இந்த ஹதீஸை கொஞ்சம் கவனமாக உற்று நோக்கவும் ! ஒரு பெண் அந்நிய ஆணுடன் இருப்பது ,அவனுடன் பிரயாணம் செய்வது கூடாது .மேலே உள்ள ஹதீஸை கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் ,இன்ஷாஅல்லாஹ் நேரான வழியும் ,சீரான வாழ்வும் மறுமை சிந்தனை பிறக்கும் ,நிச்சயமாக உள்ளத்தில் ஒரு உண்மையான விளக்கம் உதிக்கும் !

ஒவ்வொரு ஆண்,பெண்  கல்வி கற்பது அவசியம் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து அவரவர் பிள்ளைகளுக்கு முறைப்படி கல்வி கற்க முன்வர வேண்டும் ! உலக கல்விக்கு முக்கியம் கொடுக்க கூடிய பெற்றோர்கள் ஏன் மார்க்க கல்விக்கு முக்கித்துவம் கொடுப்பதில்லை ?

சீரழிக்க கூடிய இந்த சினிமாவும் ,டிவி சீரியலும் பார்க்கும் பெண்கள் ஏன் தன் பிள்ளைகளை பற்றி கவலை இல்லாமல் இருக்கிறார்கள் ? சீரியலில் கவனம் செலுத்தும் நம் சமுதாய பெண்கள் ,அவர்களின் பிள்ளகைளின் விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்!

ஒவ்வொரு வீடுகளிலும் அல்லாஹ் வின் திருமறை ஓத வேண்டும் ,நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் படிக்க வேண்டும் ! ஒவ்வருவரும் மார்க்க பற்று உள்ளவர்களாக மாறவேண்டும்! அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கிருபை செய்ய வேண்டும்!ஆமீன் ...