சிந்திக்க மாடீர்களா ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்திக்க மாடீர்களா ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2015

விளம்பரமாகும் ஹஜ் வணக்கம் ...

இன்ஷாஅல்லாஹ் இன்னும் சில நாட்களில்
ஹஜ்ஜுக்காக புறப்பட இருக்கும்
அன்பு சகோதர /சகோதரிகளுக்கு !
ஒரு அன்பான வேண்டுகோள் !
ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக 
இருக்க வேண்டும் !
விளம்பரமாகும் ஹஜ் வணக்கம் ...
ஹாஜிகள் மக்காவிற்குப் பயணமாகும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இலட்சக்கணக்கில் பணத்தை செலவழித்துச் செய்கின்ற இந்த ஹஜ் எனும் வணக்கம் பாழாகிவிடக்கூடாதுஇ பயனற்றதாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஹாஜிகளின் அன்பான கவனத்திற்கு மார்க்கம் கூறும் அறிவுரைகளை அளிக்கின்றோம்.




பொதுவாக எந்தவொரு வணக்கத்திற்கும் இக்லாஸ் எனும் தூய எண்ணம் வேண்டும். இந்தத் தூய எண்ணம் இல்லையென்றால் அந்த வணக்கம் இறைவனிடம் ஒப்புக் கொள்ளப்படாது.

ஞாயிறு, மார்ச் 22, 2015

ஆடம்பரம் தேவைதானா...? சிந்தித்துப் பாருங்களேன்...!

ஆடம்பரம் தேவைதானா..? சிந்தித்துப் பாருங்களேன்!
 அல்லாஹ்வின் திருபெயரால் ......

மனித வாழ்க்கையின் அனைத்து நடைமுறைகளையும், இஸ்லாம் எப்படியெல்லாம் செயலாற்ற வேண்டும் என்ற அழகான நல்வழியை காண்பித்திருக்கின்றது . அதன் வழிவந்த இறைவனின் பல்லாயிரக்கணக்கான உத்தம திருத்தூதர்கலாம் நபிமார்களும், கணக்கிலடங்கா சத்திய சஹாபாக்களும் மற்றும் மார்க்க ஈடுபாடுடைய பெரியோர்களும், இன்னும் நல்லடியார்களும் வாழ்க்கை எனும் பாதையை மிகமிக எளிமையான முறையில் வாழ்ந்து வல்லோனின் திருப்பொருத்தத்தை அடைந்தார்கள். எந்த ஒரு செயல்களிலும் அவர்களிடம் ஆடம்பரம் இருந்தது கிடையாது. இதற்கு சாட்சியாக சான்றுகளும், சம்பவங்களும் இஸ்லாமிய வரலாற்றினை புரட்டி பார்த்தால் பாங்காய் எடுத்து இயன்புகின்றது.

புதன், பிப்ரவரி 25, 2015

மாற்றத்தின் நேரம் அதிகாலை !

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை
நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை
நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது.

வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாக
அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான
ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.

ரமளான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின் போது பள்ளிவாசலின் நிலையைப்
பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட
முழுமையாக இருக்காது. இதற்காகவா இவ்வளவு பொருள் செலவில் பரந்து விரிந்த
பள்ளிவாசல்களைக் கட்டினோம்..?

வெள்ளி, ஜனவரி 03, 2014

பொய் பேசுவதனால் ஏற்படும் தீங்குகள்




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சட்சி கூறுகிரறேன். மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் உண்மை அடியாரும் ஆவார்கள் எனவும் நான் சாட்சி கூறுகிறேன்.

சனி, ஆகஸ்ட் 10, 2013

சிந்திக்க மாடீர்களா ?

சிந்திக்க மாடீர்களா ?

எவனுடைய கையில் ஆட்சி இருகின்றதோ அவன் பாக்கியவான் ; மேலும் அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன் .