உண்மை முஸ்லிமின் அடையாளம் . லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உண்மை முஸ்லிமின் அடையாளம் . லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 17, 2017

இஸ்லாம் கூறும் நற்பண்புகள்

ابتثج

இஸ்லாம் கூறும் நற்பண்புகள்👍👏😇😂

மக்களில் பெரும்பாலானவர்கள் உங்களின் இறைநம்பிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதையோ, அல்லது உங்கள் வணக்க வழிபாடுகள் எப்படி என்பதையோ பார்க்கமாட்டார்கள். மாறாக, உங்கள் குணநலன்களையே கவனிப்பார்கள். உங்களின் பண்புகள் சிறந்தவையாக இருந்தால், உங்களின் இறைநம்பிக்கையின் மூலமும் கல்வியின் மூலமும் மக்கள் பலனடைவார்கள். உங்களின் வணக்க வழிபாடுகளையும் குணநலன்களையும் பின்பற்றுவார்கள். ஆனால் உங்களிடம் நற்பண்புகள் குறைவாக இருந்தால், உங்களின் கல்வியறிவு எவ்வளவுதான் சிறந்ததாக இருந்தாலும் அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். எனவே நற்பண்களைக் கைக்கொள்வது எல்லா முஸ்லிம்கள் மீதும் கடமையாகும்.

செவ்வாய், பிப்ரவரி 09, 2016

உண்மை முஸ்லிமின் அடையாளம் .

உண்மை முஸ்லிமின்  அடையாளம் .
அல்லாஹ்வின் திருபெயரால் ..........
பொறாமை கொள்வது இறையச்சமுடைய முஸ்லிமுக்கு சற்றும் பொருத்தமற்ற குணமாகும். நபி[ஸல்] அவர்கள் பொறாமை என்ற இழிகுணத்தை பற்றி வன்மையாகக் கண்டித்துக் கூறினார்கள்.. ''ஓர் அடியானின் இதயத்தில் ஈமானும் பொறாமையும் ஒன்று சேராது''.
.ஆதாரம்.. சஹீஹ் இப்னு ஹிப்பான் ]

உண்மை முஸ்லிமின் அடையாளம்  அவரது இதயம் ,மோசடி, பொறாமை, வஞ்சம் போன்ற தீய குணங்களிலிருந்து பரிசுத்தமானதாக இருப்பதாகும். அந்த மனத்தூய்மையே  அவரை சுவனத்தில் சேர்ப்பிக்கும். அவர் பகல் முழுவதும் நோன்பிருந்து இராக்காலங்களில் நின்று வணங்கவில்லை என்றாலும் சரியே.