அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
ஈமானின் இன்றைய நிலவரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈமானின் இன்றைய நிலவரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 13, 2016

ஜனாஸாவும் இன்றைய முஸ்லிம்களும் ...

ஜனாஸாவும் இன்றைய முஸ்லிம்களும் ...
அல்லாஹ்வின் திருபெயரால் ..
உண்மை முஸ்லிம் ஜனாஸா தொழுகைக்கான சட்டங்களையும் அதில் ஓதப்பட வேண்டிய நபிவழி துஆக்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.
மரணம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஜனாஸா தொழுகை நடந்து கொண்டுதான் இருக்கிறது.  ஆனால், இன்னும் நம்மிடத்தில் எந்த மாற்றமும் வரவில்லை. வந்தாலும் அதை தடுப்பதற்கு சிலர் தயாராக இருக்கிறார்கள். இன்னும் பிடிவாதம் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஊர் வழக்கம் என்று சொல்லிக் கொண்டு , நபிவழிக்கு மாற்றமாகத்தான் நடந்து கொண்டியிருக்கிறது.

சனி, ஆகஸ்ட் 15, 2015

எண்ணப்படியே முடிவும் இருக்குமா ?[படிப்பினை இருக்கிறது ]

அல்லாஹ்வின் திருபெயரால் .......
சத்தியம் வந்தது! அசத்தியம் அழிந்தது! நாம் முஸ்லிமாக இருப்பதற்கு ''எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே '' நாம் இங்கு குறிப்பிட்டுள்ள ஓர் சம்பவம் அது கதையா அல்லது உண்மையா என்பதை அல்லாஹ் மிக்க அறிந்தவன். அதில் நமக்கு சில படிப்பினைகள் இருக்கிறது. வெளிநாட்டில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு சிலருக்கு பாடமாகவும், படிப்பினையாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.

புதன், டிசம்பர் 17, 2014

உன்னால் முடியும் தம்பி ! [தொடர்ச்சி ]

அல்லாஹ்வின் திருபெயரால் ......

இன்ஷாஅல்லாஹ்  நாம் தொடர்ச்சியைப் பார்ப்போம்................

ஆபத்து சூழ்ந்த நிலையில்  'தவ்ரு ' என்ற குகையில் அண்ணல் பெருமானார் [ஸல்] அவர்களும் , அவர்களின் ஆருயிர் நண்பர் ஹஜ்ரத் அபூபக்ர் [ரலி] அவர்களும் மறைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எதிரிகள் அடையாளம் கண்டு அங்கேயும் வந்துவிட்டார்கள். அஞ்சா நெஞ்சம் படைத்த ஹஜ்ரத் அபூபக்ர் [ரலி] அவர்கள் கலங்கி நிற்கும் வேளையில் , பெருமானார் [ஸல்] அவர்கள்  'அஞ்சற்க! அல்லாஹ் நம்மோடிருக்கிறான் ' என்று தனது நண்பருக்கு ஆறுதல் மொழி கூறினார்கள். [அல்குர் ஆன் 9..40] அவர்கள் சிறிதும் கலக்கமடையாமல் எதற்கும் தயாரானார்கள். இந்த வீர வரலாறு அவர்களின் இறைபக்தி கலந்த தன்னம்பிக்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டன்றோ !

செவ்வாய், டிசம்பர் 16, 2014

உன்னால் முடியும் தம்பி!

அல்லாஹ்வின் திருபெயரால்...........

''நீர் முடிவெடுத்து விட்டால் , இறைவன் மீது பொறுப்பு சாட்டுவீராக!''
அல்குர் ஆன் 31..159]


வாழ்வில் ஒரு மனிதன் முன்னேறுவதற்கு தன்னம்பிக்கை அவசியமானதாகும். 'நம்மால் எப்படி முடியும் ? '  என்ற தாழ்வு மனப்பான்மை கொண்டோர் , வாழ்வில் முன்னேறாமலே போய் விடுவதையும், 'நம்மால் ஆகாதது என்ன? என்ற தன்னம்பிக்கை கொண்டோர், லட்சியத்தை அடைந்து விடுவதையும் நாம் காணுகிறோம். தன்னம்பிக்கையால் உயர்ந்து எத்தனையோ தொழிலதிபர்களையும், வியாபாரச் சக்கரவர்த்திகளையும், பட்டதாரிகளையும், தலைவர்களையும், உலகம் கண்டுள்ளது, கண்டும் வருகிறது.

சனி, டிசம்பர் 06, 2014

நாவினால் சுட்ட புண் !

அல்லாஹ்வின் திருபெயரால்.......

இது என்ன புதுவிதமான தலைப்பாக இருக்கிறதே? என யோசிக்கிரீகளா ? இப்போதுள்ள காலகட்டத்தில் இது அவசியமாகப் பின்பற்றக் கூடியதாகும்.  அன்றாட வாழ்க்கை முறையில் ஒவ்வொரு செயலையும் ''இப்படித்தான் செய்திடல் வேண்டும் ' என்ற நெறியினை வகுத்துத் தந்துள்ளது நம் மார்க்கம் இஸ்லாம் . ஃபஜர்  தொழுகையினை நிறைவேற்றித் திரும்புபவர் ஈமானின் கொடியினை ஏந்தியவராக வருகிறார் எனவும், கடைவீதி சென்று விட்டுத் திரும்புபவர் ஷைத்தானின் கொடியினை பிடித்தவராக வருகிறார் என்றும் நாளின் துவக்கத்தினையே மிக அழகாகச் சுட்டிக் காண்பிக்கிறார்  கருணை நபி [ஸல்] அவர்கள். இப்படி ஒவ்வொரு செயலிலும் ஒழுக்கம் என முழுக்க முழுக்க ஒழுக்கத்தையே கற்றுத் தருகிறது இஸ்லாம். நமது பிள்ளைகள் இதனைப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது பெற்றோர்களின் கடமையாகும் . இத்தகைய இஸ்லாம் காட்டும் நெறி முறையினை எங்கே கற்பது?  ஆண்பிள்ளைகளை பள்ளி விடுமுறை தினங்களில் ஜமாத்தில் அனுப்பி வைக்க வேண்டும். அதுதான் பயிற்சி தரும் பள்ளிக் கூடங்கள் . இஸ்லாமின் அனைத்து பயிற்சிகளும் தரப்படுகிறது .

சனி, மார்ச் 22, 2014

மரணத்தில்மதிப்பைப் பேணுங்கள்!

அல்லாஹ்வின் திருபெயரால் ......
எல்லாப் புகழும் , புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் !

மரணம் செய்தி கேட்டால் இதை எல்லோரும் கூறுவார்கள். ஏதாவது துன்பமான செய்தி அல்லது துயரமான செய்தி கேட்டால் கூட இதைச் சொல்ல வேண்டும் .

புதன், பிப்ரவரி 12, 2014