இஸ்லாத்தின் பார்வையில் இணைவைப்பு! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாத்தின் பார்வையில் இணைவைப்பு! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மார்ச் 08, 2020

இணைவைப்பவர்கள் அன்றும், இன்றும்.

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

தற்காலத்தில் வாழும் கப்ரு வணக்க முறைகளை ஆதரிப்போர்களிடம், “ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகளைப் போல நீங்களும் கப்ருகளை வணங்குகிறீர்களே” என்று கேட்டால் அவர்கள் கூறக்கூடிய பதில் என்னவென்றால்,

ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் நாங்களோ எந்த சிலைகளையும் வணங்கவில்லை; இறைநேச செல்வர்களின் கப்ருகளுக்கு சென்று அவர்களிடம் தானே பிரார்த்திக்கின்றோம் (துஆச் செய்கின்றோம்)! அந்த இறை நேச செல்வர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்து கண்ணியப்படுத்துகிறோம்! எங்களுக்காக இறைவனிடம் மன்றாடி எங்களின் கோரிக்கைகளைப் பெற்றுத் தருமாறு அவர்களிடம் பிரார்த்திக்கின்றோம்! ஆனால் நாங்கள் அவர்களை வணங்கவில்லை” என்று கூறுகின்றனர்.

வியாழன், மார்ச் 06, 2014

நோயை நீக்க ஈமானை விற்காதீர்கள்



அல்லாஹ்வின் திருபெயரால் ..........
எல்லாப் புகழும் அனைத்துலகங்களையும்  படைத்துப் பரிபாலிக்கின்ற அல்லாஹ்வுக்கே உரியன !
நிச்சயமாக என் தொழுகையும் , என் தியாகமும் , என் வாழ்வும் , என் மரணமும் அகிலத்தின் அதிபதியாம் அல்லாஹ்வுக்கே அர்ப்பணமாகும் .

அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உம்முஸ்சாயிபி (ரலி) என்ற ஒரு சஹாபிய பெண்மணி இருந்தார்கள். அவர்களுக்குக் கடுமையான ஜுரம் (காய்ச்சல் ) ஏற்பட்டு இருந்தது. இதைக் கேள்விப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியை நலம் விசாரிக்கச் சென்றார்கள் .

வியாழன், ஆகஸ்ட் 08, 2013

இஸ்லாத்தின் பார்வையில் இணைவைப்பு!

இஸ்லாத்தின் பார்வையில் இணைவைப்பு!

Post image for இஸ்லாத்தின் பார்வையில் இணைவைப்பு!

அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (4:48,116)
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதமின் மகனே! என்னிடம் ஆதரவு வைத்து என்னை நீ அழைத்தால் நீ செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுகிறேன், நான் எதையும் பொருட்படுத்த மாட்டேன். ஆதமுடைய மகனே! நீ செய்த பாவங்கள் வானம் நிரம்ப இருந்தாலும் பிறகு என்னிடம் நீ மன்னிப்புக் கோரினால் நான் உன்னை மன்னித்து விடுகிறேன். நான் எதையும் பொருட்படுத்த மாட்டேன். நீ இப்பூமி நிரம்ப பாவங்கள் செய்து எனக்கு எதையும் இணை வைக்காமல் என்னை சந்தித்தால் இப்பூமி நிறைய மன்னிப்பை உனக்கு வழங்குவேன். அறிவிப்பவர்:அனஸ்(ரழி) நூல்:திர்மிதி