இளைஞர்கள் செல்லும் பாதை எது ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளைஞர்கள் செல்லும் பாதை எது ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 30, 2018

இளைஞர்கள் செல்லும் பாதை எது ?

இளைஞர்கள் செல்லும் பாதை சரியா ?

இளைஞர்கள் செல்லும் பாதை எது ?
மனித வாழ்க்கை மூன்று பருவங்களைக் கொண்டது. பிறந்தவுடன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றான். பால்குடி மறக்கின்ற வரை பெற்றோரை முழுமையாகச் சார்ந்திருக்கின்றான். வளர, வளர விடலைப் பருவம். அதன் பின் எதைப் பற்றியும் கவலைப்படாத, யாரையும் எவரையும் சார்ந்து நிற்காத இளமைப் பருவம். ஒரு நாற்பது வயது வரை அதை அவன் முழுமையாக அனுபவிக்கின்றான்.

ஒரு மனிதன் தான் இளமையான பருவத்தில் தான் தவறிழைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அந்த கால கட்டத்தில் தான் மனிதன் நல்லது, கெட்டது போன்ற பல்வேறு நற்செயல்களையும், தீய பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்தி கொள்கிறான்.