இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 20, 2015

கொள்கை மட்டும் போதாது !தொழுகையும் வேண்டும்!!

மறுமையில் கேட்கப்படும் முதல் கேள்வி 
இந்த தொழுகையைப் பற்றிதான்!

கொள்கை மட்டும் போதாது !தொழுகையும் வேண்டும்!!

Bismillah...
பெரும்பாலும் மக்கள்கள் இந்த தொழுகை விஷயத்தில் அசட்டையாகவும்,அலட்சியமாகவும் இருந்துக்கொண்டுதான் வருகிறார்கள்.சிலருக்கு வணக்க வழிப்பாடுகளுக்கு மட்டும் ஆர்வம் இருப்பதில்லை. மற்ற உலக காரியத்திற்காக ரொம்ப ஆரவமாக ஈடுபாடாக இருப்பார்கள். அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறிய ஒரு ஹதீஸ் கருத்து.. எனக்கு கண்குளிர்ச்சி தொழுகையில் தான் இருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவே மென்மையான குணம் உடையவர்கள். எதிரிகள்
செய்த ஏராளமான கொடுமைகளை மன்னித்திருக்கிறார்கள். இப்படி மென்மையான குணம்
கொண்ட நபி (ஸல்) அவர்கள் ஒருவரை எரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்
என்றால் அவர் செய்த குற்றம் எவ்வளவு பெரிய குற்றமாக இருக்கும்?
தொழுகைக்காகப் பள்ளிக்கு வராதவரின் வீட்டைத் தான் நபி (ஸல்) அவர்கள்
எரிக்க வேண்டும் என்று நாடினார்கள். ஜமாஅத் தொழுகை பள்ளியில் நடக்க,
அதைப் பொருட்படுத்தாமல் வீட்டில் அமர்ந்து கொண்டிருப்பவர்கள் இதை மனதில்
பதிய வைக்க வேண்டும்.

திங்கள், மார்ச் 16, 2015

ஒரு உண்மையான நண்பர் யார் ...?

ஒரு உண்மையான நண்பன் யார்?
அல்லாஹ்வின் திருபெயரால் ....

ஒரு உண்மையான நண்பர் யாராக இருக்க முடியும்..? ஒரு நண்பனின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு ,அவனுக்கு உதவியாகவும், ஒத்தாசையாகவும் இருப்பவனா ? அல்லது நண்பன் அழைக்கும்போதெல்லாம் , அவனைப் பின்தொடர்ந்து செல்லுவது ,ஊர் சுற்றுவது ,பிறந்தநாள் கொண்டாடுவது இவைகள் யாவும் செய்பவன் உண்மையான நண்பனா? நண்பனுக்கு ஏதாவது ஒன்று என்றால் ,  வரிந்துக் கட்டிக் கொண்டு நண்பனுக்காக வக்காலத்து வாங்குபவன் உண்மையான நண்பனா? உயிர் கொடுப்பான் தோழன் என்பார்களே அவனா? உயிர் கொடுப்பான் தோழன் அல்ல மாறாக உயிர் எடுப்பான் தோழன் . காலையில் எழுந்தவுடன் நண்பனின் வீட்டு வாசலில் , மச்சி சீக்கிரம் வா '' நாம்ம இப்போ அங்கே போவோம் , இங்கே போவோம் என்று உயிரை எடுப்பவன் தான் . மதுவை அருந்திக் கொண்டு, புகைப் பிடித்துக் கொண்டு காலத்தையும் , நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருப்பவர்கள்தான் இன்றைய நண்பர்கள். நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்களைத் தவிர.

திங்கள், பிப்ரவரி 09, 2015

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை இலட்சியமாகக் கொள்வார்

அல்லாஹ்வின் திருபெயரால் ......

முஸ்லிம், தனது செயல்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை தேடவேண்டும். அவரது ஒவ்வொரு அடியும் அவனது திருப்தியை நோக்கியே எடுத்து வைக்கப்பட வேண்டும். மனிதர்களின் திருப்தியை நோக்கமாகக் கொள்ளகூடாது அல்லாஹ்வின் நேர்வழியில் செல்லும்போது சில சமயங்களில் மனிதர்களின் கோபத்திற்கு இலக்காக நேரிட்டாலும் சரியே.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''எவர் மனிதர்களின் கோபத்திலும் அல்லாஹ்வின் திருப்தியைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவருக்கு மனிதர்களால் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன். எவர் அல்லாஹ்வின் கோபத்திலும் மனிதர்களின் திருப்தியைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவரை அல்லாஹ் மனிதர்களின் பால் சாட்டிவிடுகிறான்.  [ஆதாரம்.. திர்மிதி]

சனி, ஜனவரி 17, 2015

சோதனைகள்

sothanaikalமனிதர்களின் வாழ்க்கையில் சோதனைகள் என்பது அன்றாடம் நிகழக்கூடியதாகவே
உள்ளது. முஸ்லிம்களின் செயல்கள் அனைத்தும் மறுமைக்காகவே உள்ளது. இவ்வுலக
சோதனைகளில் மனமுடைந்து விடாமலிருக்க பின்வரும் குர்ஆன் வசனங்கள்,
ஹதீஸ்கள் உதவும்.

‘அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது.
அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க
வேண்டும்’ என்று கூறுவீராக!

சனி, மார்ச் 08, 2014

ஐவேளைத் தொழுகை

''பாருங்கள்! உங்களில் ஒருவர்[வீட்டு] வாயிற்படி , முன் ஒரு நதி ஓடிக் கொண்டிருக்க அதில் அவர் தினசரி ஐந்து வேலை குளித்துக் கொண்டிருந்தால் , உங்கள் கருத்தில் அவர் உடல் மீது கொஞ்சாமாவது அழுக்குத் தங்கியிருக்குமென எண்ணுகிறீர்களா? என்று அண்ணல் நபி[ஸல்] அவர்கள் கேட்க , அருகிலிருந்தவர்கள்  ''அவ்வாறிருந்தால் எவ்வித அழுக்கும் இருக்க முடியாது !'' என்றனர் . ''இதே உதாரணம் போன்று தான் . ஐ வேளைத்  தொழுகையாக இருக்கிறது ,, அதாவது அத்தொழுகைகளில் மூலமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை அழித்துவிடுகிறான் '' என்றார்கள் , அண்ணலார்.
ஆதாரம் .. புகாரீ ,முஸ்லிம் திர்மிதி ]

செவ்வாய், ஜூன் 18, 2013

இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்!


இருந்தாலும் ....நான் ஒரு முஸ்லிம்!
நான் சரியான இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

மார்க்க சம்பந்தமான அறிவு எனக்கு இருக்கிறதோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் மனைவி – மக்கள், குடும்பத்தினருக்கு நான் இஸ்லாத்தைப் பற்றி கூறி நல்வழிப் படுத்துகிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

எனது இல்லத்தில் இஸ்லாத்திற்கு மாறான செயல்கள் நடப்பதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!