அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
இன்றைய பெற்றோர்களின் நிலை ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்றைய பெற்றோர்களின் நிலை ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 22, 2015

பெற்றோர்கள் இறந்த பிறகு பணிவிடை என்ன?

பெற்றோர்கள் இறந்த பிறகு செலுத்த வேண்டிய பணிவிடை என்ன?
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
முதலில் இன்ஷாஅல்லாஹ் பெற்றோர்களுக்காக துஆ செய்வது எப்படி என்பதை நாம் அறிந்துக் கொள்வோம்.
யா அல்லாஹ் ! நான் அறவே பலஹீனனாகவும், அறியாதவனாகவும் இருந்தேன் . அந்த நேரத்திலே அவர்கள் என் தர்பியத்திற்காக வேண்டி தங்களின் இரத்தத்தை சிந்தினார்கள். அவர்களின் நினைவுகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி என் நிம்மதிக்காகவும் நன்மைக்காகவும் கவலைப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான ஆபத்துகளிலிருந்து தோல்விகளிலிருந்தும் காப்பாற்றுவதற்காக முயற்சி செய்தார்கள். என் உயர்வுக்காக வேண்டி பாடுபட்டார்கள். இன்று அவர்களுடைய பலஹீனமான நேரம் நெருங்கி விட்டது, அவர்களை கவனிக்க வேண்டிய பொறுப்பு என் கையில் இருக்கிறது. நான் அவர்களுக்கு தேவையான கித்மத்தும் மரியாதையும் செய்கிறேன். ஆனால் என்னால் அனைத்து ஹக்கையும் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் நான் உன்னிடம் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் மீது உன் ரஹ்மத்தான பார்வையை செலுத்துவாயாக! [ஆமீன்]

வியாழன், மே 21, 2015

தந்தை செய்த உபகாரங்கள் என்ன?

இன்ஷாஅல்லாஹ் ரமலான் நம்மை நோக்கி
வருகிறது! அதற்க்கான ஏற்பாடுகளை இன்றே செய்யுங்கள்!
அல்லாஹ்விடம் அழுது கேளுங்கள்!
ரமலானை அடைவதற்கு ....
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்......
ஒருவருக்கு ஒரு தொழிலைப் பற்றி தெரிந்தால் தான், அதை செமையாகவும், நல்ல முறையில் கவனமாகவும் , சிறப்பாகவும், பிறர் மெச்சும் அளவுக்கு செய்தால்தான் அந்த தொழில் சிறப்படையும். அதுப்போல் தான் பெற்றோர்களின் சிறப்பும் , அவர்கள் செய்த தியாகங்கள் , அவர்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஒரு மனிதர் அறிந்தால் தான் . அவர் அவருடைய பெற்றோர்களுக்கு நல்ல முறையில் பணிவிடையும் , பாசமாகவும், நல்லவிதமாக நடந்துக் கொள்வதும் கடமைகளை செய்ய முடியும்.

செவ்வாய், மே 19, 2015

தாயின் அந்தஸ்து என்ன ?

தாயை மறக்காதே! மனைவியை வெறுக்காதே!
இருவரும் உனக்கு இரண்டு கண்கள்!
தந்தை உன் தலைபோல் !
தலை இல்லாமல் புண்டமாக இருக்க முடியுமா?
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன் ....
பெற்றோர்களைப் பற்றிய சில குறிப்புகள்..

இக்காலத்தில் அநேகர் பெற்றோர்களுக்கு செலுத்த வேண்டிய கடமைகளைச் சரிவர நிறைவேற்றாமல் பெரும் பாவத்திலே மூழ்கியுள்ளார்கள். இன்னும் சிலர் பெற்றோர்களை தம்முடைய விரோதியாகக் கருதி அவர்களின் முகத்தில் விழிப்பதற்கு கூட விரும்பவில்லை. வேறு சிலர் தம்முடைய பெற்றோர்களின் மீது கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து அவர்களைக் குற்றக் கூண்டிலே ஏற்றி அவர்களை அவமானப்படுத்துவதையும் நாம் காண்கிறோம். எந்தலவென்றால் தம்முடைய பெற்றோர்கள் நோயாளியாக ஆனாலும்கூட அவர்களுக்கு கித்மத் செய்வது ஒருபுறமிருக்கட்டும், அவர்களை நோய் விசாரிக்கக் கூடச் செல்வதில்லை. அது மட்டுமல்ல, அவர்கள் மரணித்த பிறகும் கூட அந்த மையித்தைப் பார்க்க செல்வதுமில்லை. மேலும் அந்த ஜனாஸாவின் வைபவங்களில் கூட பங்கு பெறுவதில்லை.

திங்கள், டிசம்பர் 08, 2014

பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்

அல்லாஹ்வின் திருபெயரால் ...
அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ் ]


உண்மை ,முஸ்லிமின் தலையாயப் பண்புகளில் பெற்றோருடன் உபகாரமாகவும் நன்றியுடனும் நடந்து கொள்வதும் ஒன்றாகும் . இஸ்லாம் வலியுறுத்தும் மிக முக்கியக் கடமைகளில் பெற்றோருக்கு உபகாரம் செய்வது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து உறுதியான ஆதாரங்கள் உள்ளன. மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் அல்லாஹ்வின் வேதம் மற்றும் நபி [ஸல்] அவர்களின் வழிமுறைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்களை வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும். அவையனைத்தும் பெற்றோருடன் உபகாரமாகவும் அழகிய உறவுடனும் நடந்துகொள்ள வலியுறுத்துகின்றன.

புதன், ஜூலை 31, 2013

இன்றைய பெற்றோர்களின் நிலை ?

இன்றைய பெற்றோர்களின் நிலை ?

இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன் முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ , அ (த்தகைய )வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக ) ஏற்றுக் கொள்ளப்படும். அல்குர்ஆன் : 15:17 வசனம் 19)

அவனையன்றி (வேறு எவரையும் ) நீர் வணங்கலாகாது என்றும் , பெற்றோர்ருக்கு  நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கிறான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால்  , அவர்களை உஃப்  (சீ ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் -அவ்விருவரையும் (உம்மிடமிருந்து) விரட்ட வேண்டாம் -இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! 
இன்னும் இறக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக ; மேலும்  ,, என் இறைவனே ! நான் சிறு பிள்ளையாக இருந்த போது  , என்னை (ப்பரிவோடு ) அவ்விருவரும் வளர்த்தது போல் ; நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக! என்றும் கூறிப் பிரார்த்திப்பீராக!
(பெற்றோர்ரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிளிருப்பதை உங்களுடைய இறைவன்  நன்கு அறிவான் : நீங்கள் ஸாலிஹானவர்கலாக (இறைவன் ஏவலுக்கு  இசைந்து நடப்பவர்களாக ) இருந்ததால் : (உள்ளந்திருந்த்தி உங்களில் எவர் மன்னிப்புக் கோருகிராரோ  அத்தகைய ) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ் ) மிக மன்னிப்பவனாக இருக்கிறான் .
அல்குர்ஆன் : 15:17 வசனம் 23, 24; 25)