இது சத்திய மார்க்கம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இது சத்திய மார்க்கம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 27, 2015

சிந்தனைக்குச் சில வரிகள்

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன் ...

[நபியே! அவர்களை நோக்கி] நீர் கூறும்.. நீங்கள் வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாகப் பிடித்துக் கொள்ளும்...
அல்குர்ஆன்]

நீங்கள் எங்கிருந்த போதிலும், மரணம் உங்களை அடைந்தே தீரும்- மிகப் பலமான உயர்ந்த [கோட்டை] கொத்தளங்களின் மீது நீங்கள் இருந்தபோதிலும் சரியே..
அல்குர்ஆன் ]

வழிகாட்டும் வான்மறை அல்குர்ஆனும் நானில மக்களுக்கு நல்ல பல அறிவுரைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் வள்ளல் நபிமணி [ஸல்] அவர்களின் நன்மொழியும் இம்மண்ணில் வாழுகின்ற எவரும் மரணத்தை விட்டும் ஒரு போதும் தப்பிக்க முடியாது ,, நிச்சயமாக ஒரு நாள் மரணித்தே ஆகவேண்டும் என்பது சுட்டிக் காட்டி எச்சரிக்கின்றன.

புதன், ஏப்ரல் 08, 2015

எனதருமைச் சமுதாயமே !

அல்லாஹ்வின் திருபெயரால் .....

'' அல்லாஹ்வின் கயிற்றை [திருவேதம்] அனைவரும் இருக்கப் பிடியுங்கள், பிரிந்து விடாதீர்கள்.''

'சமுதாயம் உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே. சமுதாயத்துக்கு நீ என்ன செய்தாய் என்று கேள்' என்று ஒரு அறிஞர் கூறினார்.  'சமுதாயம் வேறு , நீ வேறல்ல. சமுதாயமும்- நீயும் நன்கு இறுகிய கயிறு போன்றாகும். நீ செய்யும் ஒவ்வொன்றிலும் சமுதாயநோக்கை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ' என்று இஸ்லாம் கூறுகிறது.

சனி, மே 17, 2014

விழிப்புணர்வுள்ள இறைநம்பிக்கையாளர்

அல்லாஹ்வின் திருபெயரால் ...
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !


முஸ்லிமிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு, அவனுடன் உறுதியான உறவைக் கொண்டிருத்தலாகும். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து , அவனை சதாவும் நினைவு கூர்ந்து காரணங்களைக் கையாள்வதுடன் , அல்லாஹ்விடம் உதவியும் தேட வேண்டும். அவன் எவ்வளவுதான் உழைத்தாலும் தனது உள்ளத்தின் ஆழத்தில் அல்லாஹ்வின் உதவி, உபகாரத்தின்பால் அனைத்து நிலையிலும் தேவையாகிறோம் என்பதை  உணர்ந்து கொள்ள வேண்டும்.

சனி, மார்ச் 15, 2014

நல்லநட்பு வேண்டும்

அல்லாஹ்வின் திருபெயரால் ....
எல்லாப் புகழும் ,புகழ்ச்சியும் அல்லாஹ்  ஒருவனுக்கே உரித்தாக !!

அண்ணலார் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் அனைத்து விஷயங்களையும் [இம்மைக்கும், மறுமைக்கும் ] சொல்லி ,செய்து விட்டார்கள் . இது இல்லை, அது இல்லை என்று எந்த ஒரு பேச்சுக்கும் இடம் இல்லை . நாம் சத்திய பாதையில் இருக்கிறோம் .

சனி, மார்ச் 08, 2014

இஸ்லாமும் மனித நேயமும்

அல்லாஹ்வின் திருபெயரால் ....

மனித நேயம் என்றால் மனிதப் பண்பாடு , குணங்கள் மற்றவரைத் தன்னைப் போன்று நினைப்பது . மற்றவரிடம் நீதமாக நடந்து கொள்வது இவைகளுக்கு மனிதநேயம் எனப்படும். மனித இனத்திற்கு நேர்வழி காட்ட வந்த நபியவர்கள் மனித நேயத்துடனும், நீதியுடனும் தாம் வாழ்ந்தது மட்டுமல்லாமல் பிறரையும் அவ்வாறே வாழச் சொன்னார்கள். அனால், இன்று மனிதர்கள் தாமும் தம் குடும்பத்தினரும் நன்றாக இருந்தால் போதும்  பிறர் எக்கேடு கெட்டால் எனக்கென்னவென்று வாழ்கிறார்கள் இதுதான் மனிதநேயமா?

சனி, பிப்ரவரி 15, 2014

தந்தை செய்த உபகாரங்கள் என்ன?

அல்லாஹ்வின் திருபெயரால் ....
அஸ்ஸலாமு அழைக்கும் !

இன்று நடக்ககூடிய சில விஷயங்களைப் பார்க்கும்போது ரொம்ப மன வருத்தமாக இருக்கிறது. சில பிள்ளைகளின் விஷயத்தைப் பற்றி கூறுகிறேன் . பெற்றோர்கள் படாதபாடுப்பட்டு உழைக்கிறார்கள் , பிறகு அவர்களுக்கு முடியாத காலம் வரும்போது . அவர்கள் சோர்வு அடைந்துவிடுகிறார்கள் , அவர்களை பிள்ளைகள் கவனிக்க வேண்டிய நேரத்தில் , பிள்ளைகளின் அலச்சியப் போக்கும் , அக்கறை இல்லாமையும் இருக்கும் காலமாகிவிட்டது . சில பெற்றோர்கள் அனாதைபோல காட்சி அளிக்கும் கோலத்தை நாம் சில இடங்களில் காண முடிகிறது. பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் அருமை, பெருமை தெரியவில்லை , அவர்களுக்கு ஒரே குறிக்கோள் சொத்து " மட்டும்தான் அவர்களுக்கு தென்படுகிறது . குரானை பாருங்கள் ! அண்ணல் நபி [ஸல்] அவர்களின் போதனைகளைப் பாருங்கள்! இம்மையிலே என்ன ஆகும் என்பதை பிள்ளைகள் சிந்திக்க வேண்டும்  ! அல்லாஹ்வை அஞ்சி   கொள்ளுங்கள் !

வியாழன், பிப்ரவரி 13, 2014

ஈமானின் எழுச்சி



அஸ்ஸலாமு அழைக்கும் !
அல்லாஹ்வின் திருபெயரால் ....
வாழ்வதற்காகத்தான் அல்லாஹ் நம்மை படைத்தான். வீணாக அழுவதற்காகவும் , அழிவதற்காகவும் அல்லாஹ் நம்மை படைக்கவில்லை . எல்லாம் என் தலைவிதி ! என்று கடந்த காலத்தை எண்ணி வருந்துவது , என்ன செய்யப் போறமோ ! தெரியலையே ! என்று எதிர் காலத்தை எண்ணி ஏங்குவது நமது பலகீனமாக உள்ளது.

ஞாயிறு, பிப்ரவரி 09, 2014

சுத்தமானதை சாப்பிடுவீர் !




அல்லாஹ்வின் திருபெயரால் ...
ஹலாலான சம்பாத்தியம் /ஹலாலான உணவுகள்
இந்த விஷயத்தில் சிலர் போடுபோகியாக இருக்கிறார்கள் என்பது எதார்த்த உண்மை!
அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹலாலான முறையில் சம்பாத்தியம் செய்வதற்கு தௌபீக் செய்வானாக .ஆமீன்..............

வியாழன், ஜனவரி 23, 2014

இது தான் மகத்தான வெற்றியாகும்"




அல்லாஹ்வுக்கு  அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான் ; மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு .

முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு  முன்னாலும் , அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும் , (அப்போது அவர்களை நோக்கி ;) "இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்கத்துச் சோலைகளாகும் ; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் -இது தான் மகத்தான வெற்றியாகும்" (என்று கூறப்படும்)
அல்குர் ஆன் :57:11-12)

புதன், ஜனவரி 08, 2014

அல்லாஹ் அளவற்ற அருளாளன் ,நிகரற்ற அன்புடையோன் !!!!!!!!


அல்லாஹ் அளவற்ற அருளாளன் ,நிகரற்ற அன்புடையோன் !!!!!!!!
(நபியே) நிச்சயமாக பூமியில் உள்ளவற்றையும், அவனது கட்டளைப்படியே கடலில் செல்லும் கப்பலையும் அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? தனது கட்டளையின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அதனை அவனே தடுத்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணையாளன், நிகரற்ற அன்புடையவன். (அல்குர்அன் 022:065)

திங்கள், ஜனவரி 06, 2014

ஈமான் பலமும் -பலவீனமும்




அல்லாஹ்வே! (எனது) இரட்சகன் , இஸ்லாமே எனக்கு வழிகாட்டும் மார்க்கம், முஹம்மதே அல்லாஹ்வின் தூதர் என்று எவர் மனப்பூர்வமாக பொருந்திக்  கொள்கிறாரோ அவர்தான் ஈமானின் (நம்பிக்கையின்) இன்பத்தை  அடைவார்
ஆதாரம்: நூல் : மிஷ்காத் )

இந்த உலகத்தில் அல்லாஹ் செழிப்பான வாழ்வை தான்  விரும்பியவருக்கும் , விரும்பாதவருக்கும் கொடுக்கிறான் . ஆனால் தான் அன்பு  கொண்டவர்களுக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு ஈமான் உறுதியை பக்தி ஒழுக்கத்தையும் கொடுப்பதில்லை .
அல்ஹதீஸ்)

ஈமான் கொண்டவர்களின் இதயம் அல்லாஹ்வின் இரண்டு விரலுக்கிடையில்  இருக்கின்றது .(இவர்களின் நடைமுறைக்குத் தக்கவாறு அவர்களை இயங்கச் செய்கின்றான் )
நூல்: இஹ்யா )

வெள்ளி, டிசம்பர் 20, 2013

முக அழகை தந்தவனே , அக அழகையும் தந்தருள்வாய் !



முக அழகை தந்தவனே, அக அழகையும் தந்தருள்வாய்!
"இறைவா நீ என் உருவத்திருக்கு அழகைத் தந்தது போல் எனது குணநலன்களையும் அழகுறச் செய்வாயாக !" -என்று அருமை நாயகம் பிரார்த்தித்தார்கள் .
அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி) அவர்கள் ,
நூல் அஹ்மது)

சனி, டிசம்பர் 14, 2013

மனிதனின் மரணமும் வாழ்வும்.




அல்லாஹுதஆலா கூறுகிறான்:

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர்  என்பதைச்  சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும்  படைத்தான் ; மேலும் அவன் (யாவரையும் ) மிகைத்தவன் ; மிக மன்னிப்பவன் .
அல்குர் ஆன் :67:2)

வெள்ளி, நவம்பர் 22, 2013

சோதனை+ மனவேதனை +சிரமம் =வெற்றி




அல்லாஹ்வின் திருபெயரால் .....
அல்லாஹ்வின் மார்க்கத்தை நோக்கி மக்கள்கள் வருகிறார்கள் , இன்ஷாஅல்லாஹ் இன்னும் வருவார்கள் . இதுதான் சத்திய மார்க்கம் , சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது !

சனி, நவம்பர் 16, 2013

தடை செய்யப்பட்ட தீமைகள் !




1) ஷிர்க் எனும் இணைவைத்தல்!
“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்” (அல்-குர்ஆன் 4:48)