அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
அறிந்துகொள்ளுங்கள்நன்மையை அள்ளிகொள்ளுங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிந்துகொள்ளுங்கள்நன்மையை அள்ளிகொள்ளுங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 24, 2020

எண்ணமும் செயலும்


உமர் (ரலி )அவர்கள் கூறியது : இறை தூதர்( ஸல்) அவர்கள் கூறினார்கள், செயல்கள் எல்லாம் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன .ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல் ) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்தி படுத்துவதை ) நோக்கமாக கொண்டு அமைகிறதோ அவர் ஹிஜ்ரத் (தின் பலனும்) அவ்வாறே அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக ஆதாயத்தை அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாக கொண்டுள்ளதோ அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாக தான் இருக்கும். (நூல் : புஹாரி 1,54,2529,5070)

இந்த நபிமொழி மூலம் ஒரு வணக்கத்தை அல்லது நற்செயலை அல்லாஹ்வின் திருப்திக்காக என்ற எண்ணத்துடன் செய்தால்தான் அதற்குரிய நன்மை கிடைக்கும் என்பதையும் உலக நன்மையையும் நோக்கமாக கொண்டு அவற்றை செய்தால் அவற்றுக்குரிய நன்மை கிடைக்காது என்பதையும் அறிந்து கொள்கிறோம்.

செவ்வாய், மே 12, 2015

வெற்றிகரமான கணவர் [தொடர்ச்சி]

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்......
வெற்றிகரமான கணவர் என்ற தலைப்பில் சென்ற இதழின் தொடர்ச்சி இன்ஷாஅல்லாஹ் பார்ப்போம்.. இன்றையக் காலக்கட்டத்திற்கு ஏற்ற கட்டுரை என்று நாம் எண்ணுகிறோம் .. இன்று கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகள் கூட , தலாக்கில் போய் முடிகிறது . ஒருவர்கொருவர் நன்றாக புரிந்துக்கொண்டால் , அவரவர் பொறுப்பை செம்மையாக செய்தால் பிரச்சனை ஏன் வருகிறது ..? அல்ஹம்துலில்லாஹ் ...!!

திங்கள், மே 11, 2015

வெற்றிகரமான கணவர்

கணவனும், மனைவியும் ஒன்றாக சுவனம்
நுழைய வேண்டும் ! 
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்.........

மார்க்கப் பற்றுள்ள முஸ்லிமே சமூகத்தின் வெற்றிகரமான கணவராகவும் நல்ல மனைவியின் நேசத்திற்குரியவராகவும் திகழமுடியும். இஸ்லாமின் நேரிய வழிகாட்டுதலின் காரணமாக மனைவியிடம் மென்மையாகவும், மிருதுவாகவும் நடந்துகொள்வார். நற்குணங்களால் பின்னப்பட்டுள்ள இஸ்லாமிய வாழ்வியல் கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார். மனைவியின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்து, அவளது நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதை நிறைவேற்றுவதில் தனது முழு ஆற்றலையையும் வெளிப்படுத்துவார். இதற்கிடையில் பெண் கோணலான எழும்பினால் படைக்கப்பட்டவள். அவளை முழுமையாக சீர்படுத்துவது அறவே சாத்தியமற்றது என்பதையும் மறந்துவிடமாட்டார்.

புதன், ஏப்ரல் 01, 2015

விருந்து உபச்சாரம்

சுவையான உணவுகள் இல்லாவிட்டாலும்.அன்பான உபசரிப்பு அதுபோதும்!
அல்லாஹ்வின் திருபெயரால் ............

''அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர், தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும் , பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும் . [அல்ஹதீஸ் ]
 முஸ்லிம்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள் என்பது காலங்காலமாக கூறப்பட்ட உண்மை . நம் மார்க்கம் இஸ்லாம். நாம் சத்திய பாதையில் இருக்கிறோம். நம் உயிருக்கு மேலாக மதிக்கக் கூடிய அண்ணல் நபி [ஸல்] அவர்கள் , கற்றுத் தராத , சொல்லித் தராத, காட்டித் தராத எந்த ஒரு விடயமும் இல்லை . இம்மை, மறுமைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் வாழ்ந்துக் காட்டி சென்றுள்ளார்கள் . அண்ணல் நபி [ஸல்] அவர்களைப் போன்ற மாமனிதர் இந்த உலகம் காணவில்லை . இனி ஒருபோதும் காணமுடியாது.

புதன், ஜனவரி 14, 2015

சிந்திக்க சில முத்துக்கள்!!!

அல்லாஹ்வின் திருபெயரால் ......**********

நல்ல விஷயங்கள் கிடைக்குபோது அவைகளைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் . நழுவ விடாதீர்கள் ! 

அடுத்தவன் மீது குற்றம் கண்டு பிடித்து விட, வேண்டுமென்றே இல்லாத ஒன்றை  [வீண்பழி] சுமத்துபவனை அல்லாஹ் நரகத்தில் தூக்கி எறிவான்.

செல்வந்தனாக வேண்டும் என்று பேராசைக் கொள்ளாதீர்கள். அது உங்களை நேர்மையை விட்டும் தூரமாக்கி விடும் .

புதன், நவம்பர் 26, 2014

இறையச்சத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ..ஸாபித் இப்னு ஹைஸ் [ரலி]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

நம்பிக்கையாளர்களே! நபியின் குரலுக்கு மேலாக உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்; உங்களுக்குள் மற்றொருவர் இரைந்து பேசுவதுபோல் நபியிடம் இரைந்து பேசாதீர்கள்; [இவற்றால்] நீங்கள் அறிந்து கொள்ளமுடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்துபோகும்.[49 ;2 ]

சனி, நவம்பர் 22, 2014

ஏழ்மையை விரட்டிடுவீர் !

அல்லாஹ்வின் திருபெயரால்........


''நீங்கள் செலவிட்ட சிறிய அளவிற்கும் , அவன் பகரமளிக்கிறான். செல்வமளிப்பவர்களில் அவன் சிறந்தவன்.''-அல்குர் ஆன்  34..39

இஸ்லாமிய ஐம்பெருங் கடமைகளுள் தொழுகையை அடுத்து முக்கியமான கடமை ஜக்காத் ஆகும். அருள் மறையில் தொழுகையைப் பற்றிக் குறிப்பிடப்படும் போதெல்லாம் , ஜக்காத்தையும் குறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இறைவனை  வழிபடுவதற்காக தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது என்றால், இறை அடியார்களுக்கு ஆதரவு அளித்து,  அதன் மூலம் இறையன்பைப் பெறுவதற்காக ஜக்காத் கடமையாக்கப்பட்டுள்ளது.

சனி, நவம்பர் 01, 2014

செல்வத்தை சுத்திகரித்து சீர் செய்யும் ஜகாத்தை தெரிந்து கொள்ளுங்கள்

அல்லாஹ்வின் திருபெயரால் .......
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !


ஜகாத் என்றால் என்ன ?

ஜகாத்துடைய நிஸாப் என்னும் தகுதியைப் பெற்றிருப்பவர் , அவரிடம் இருக்கும் பொருள்களில் நாற்பதில் ஒரு பகுதியை, தகுதியுடைய ஏழைக்குக் கொடுத்து உரிமைப்படுத்துவது ஜகாத் எனப்படும்.

ஜகாத்தின் பயன்கள் யாவை?

ஜகாத் அளிப்பதின் மூலம் ஐம்பெருங்கடமைகளில் ஒன்று நிறைவேறுகிறது. ஜகாத் நிறைவேற்றப்பட்ட செல்வங்கள் தூய்மை பெறுகின்றன,, பரக்கத் பெற்று வளர்ச்சி அடைகின்றன. அதுமட்டுமின்றி, மறு உலகில் அதனுடைய நன்மைகள் பெரிதாகி, அதிகரித்து, அதை அளித்தவர் இவ்வுலகில் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட காரணமாக அமைகின்றது.

ஞாயிறு, அக்டோபர் 26, 2014

இன்னா செய்தாரை ஒறுத்தல் ............

அல்லாஹ்வின் திருபெயரால் .........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !


தன்னுடைய ஒரு கண் போனாலும் பரவாயில்லை , தன் எதிரிக்கு இருகண்களும் போக வேண்டும் என்கிற மனப்போக்குதான் பெரும்பான்மையான  மக்களிடம் காணப்படுகிற வன்மம், குரோதம், பழிவாங்குதல் போன்ற மனித நேயமற்ற குணங்கள் தான், மனித சமுதாயத்தை அழிவிற்கு ஆட்படுத்திக் கொண்டிருக்கிறது. மன்னிக்கக் கூடிய சிறந்த பண்பை மனிதன் மறந்தே விட்டான் என்று கூறக் கூடிய அளவிற்கு அவனது செயல்கள், இன்று மிருக நிலையில் இருந்துக் கொண்டிருக்கின்ற  ''பழிக்கு பழி , இரத்தத்திற்கு இரத்தம்' என்ற முழக்கங்கலையே எங்கும் கேட்க முடிகிறது. நன்மை செய்வோருக்கு நன்மை செய்வதும் , தீமை செய்வோருக்கு தீமை செய்வதும் உலக நியதியாக்கப்பட்டு விட்டதால் , உயர் குணநலன்களா ன  மன்னித்தல், பொறுத்தல் போன்றவைகளை மனிதகுலம் சிந்திக்க நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.

வெள்ளி, ஆகஸ்ட் 29, 2014

பிறர் நலம் பேணுதல்

உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்மை நாடுபவராக இருப்பார்.

நபி (ஸல்) அவர்கள் “மார்க்கம் என்பது நன்மையை நாடுவது” என்று கூறியபோது, நாங்கள் கேட்டோம்: “யாருக்கு?” நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

பிறர் நலம் பேணுதல் என்பது இஸ்லாமின் அடிப்படைகளில் தலையாயதாகும். ஆரம்ப கால முஸ்லிம்கள் இறைத்தூதருடன் செய்து கொண்ட வாக்குப் பிரமாணங்களில் ஒன்றாக இது இருந்தது.

ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நான் நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலைநாட்டுவது, ஜகாத் கொடுப்பது, அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மை நாடுவது ஆகியவற்றிற்கு உறுதிப் பிரமாணம் செய்துகொண்டேன்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

திங்கள், ஆகஸ்ட் 11, 2014

வெற்றிக்கு பத்து வழிகள்

நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்; அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த நிமிடம்கூட நீங்கள் மரணிக்கலாம். ஆகவே அதற்குமுன்
உங்கள் வாழ்வில் நீங்கள் என்ன அடைந்தீர்கள்?
உங்களின் கனவு மற்றும் இலட்சியம் என்ன?
உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போட்டுள்ள பெரிய திட்டம் என்ன?
உங்கள் மரணத்துக்குப் பின் நீங்கள் எப்படி நினைவுகொள்ளப் படுவீர்கள்?
ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை பிறந்தோம்; வாழ்ந்தோம்; மரணித்தோம் என்ற வகையில் இவ்வுலகில் வாழ முடியாது! அவ்வாறு எவ்வித இலட்சியமோ அதை அடைய முயற்சியோ இல்லாத வாழ்க்கை என்பது வீணானதுதான்!
மரணத்துக்குப் பின் என்ன? என்பதைக் குறித்துத் திட்டமிட்ட வாழ்வை எதிர்நோக்குவோர் மட்டுமே இவ்வுலகத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும். அவ்வாறான ஒரு திட்டமிடலோடு வாழ்பவர்களால் மட்டுமே இலட்சியத்தை அடைய முடியும்.
இவ்வுலகில் முஸ்லிம்களாக வாழ்பவர்கள், அவர்களின் இலட்சியமான சுவர்க்கத்தை அடையவும் மரணத்திற்குப்பின் ஈருலகிலும் நினைவுகூரப்படவும் எளிதான வழி உள்ளது. அதற்கு ஒவ்வொருவரும் தம் மரணத்திற்குமுன் கீழ்க்காணும் 10 விஷயங்களைச் செய்து முடித்து விட்டால் போதும்.
தயாரா நீங்கள்?

வெள்ளி, ஆகஸ்ட் 08, 2014

தூய எண்ணம்




அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்:
செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ, அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிட்டும்.

(உதாரணமாக) ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் அமையுமாயின் அந்த ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் செய்யப்பட்டதாகும். ஒருவரின் ஹிஜ்ரத் ஏதாவது உலகாயத நன்மையைப் பெறுவதற்காகவோ, ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகவோ அமையுமாயின் இவற்றில் எதற்காக வேண்டி அவன் ஹிஜ்ரத் செய்தானோ, அதற்கானதாகவே அவனது ஹிஜ்ரத் கணிக்கப்படும். அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப் رَضِيَ اللَّهُ عَنْهُ (புகாரி, முஸ்லிம்)

ஞாயிறு, ஏப்ரல் 20, 2014

காலம்குறுகிவிடும் நற்செயல் குறைந்துவிடும்  

காலம் குறுகிவிடும் நற்செயல் குறைந்துவிடும்  அல்லாஹ்வின் திருபெயரால் ...........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !

ஒரு ஆண்டு என்பது ஒரு மாதமாக ஆகிவிட்டது , ஒரு மாதம் என்பது ஒரு வாரமாக ஆகிவிட்டது, ஒரு வாரம் ஒரு நாளாக இருக்கிறது , ஒரு நாள் ஒரு மணிநேரமாக ஆகிவிட்டது. அல்லாஹ் காலத்தை சுருக்கிவிட்டான் . மனிதர்களின் ஆயுள் காலத்தையும் குறைத்துவிட்டான் . மரணத்துக்கு வயது காலம் , நேரம் எதுவும் இல்லை . ஃபித்னா காலம் வந்துவிட்டதோ என்று எண்ணுமளவுக்கு ஃபித்னா தலை தூக்க ஆரம்பித்துவிட்டது . இதை விட்டு நாம் பாதுக்காக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி  எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்வது, அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வழிமுறைகளை அறிந்து நாம் பின்பற்றி செல்லுவது.

திங்கள், மார்ச் 10, 2014

மறைமுக தர்மமே மேலானது [தொடர்ச்சி ]

அல்லாஹ்வின் திருபெயரால் .....
எல்லாப் புகழும் , புகழ்ச்சியும் அல்லாஹ்  ஒருவனுக்கே உரித்தாக!

அல்லாஹ் கூறுகிறான்..

[இறைவழியில் ] தம் செல்வங்களை இரவிலும், பகலிலும் , இரகசியமாகவும் , வெளிப்படையாகவும் செலவு  செய்வோருக்கு அவர்களின் இறைவனிடம் உரிய பிரதிபலன் உண்டு . அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை . அவர்கள் கவலைப்படவுமாட்டார்கள் .  [அல்குர்ஆன் ]

ஞாயிறு, மார்ச் 09, 2014

மறைமுக தர்மமே மேலானது

அல்லாஹ்வின் திருபெயரால் .........
எல்லாப் புகழும், புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
அல்லாஹ் கூறுகிறான்..

நீங்கள் தர்மங்களை வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நன்றே .அவற்றை மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது[இன்னும்] உங்களுக்குச் சிறந்ததாகும் .[தர்மங்கலால் ] அவன் உங்கள் தீமைகளை அழித்துவிடுவான் . நீங்கள் செய்கின்றவற்றை  அல்லாஹ்  நன்கறிந்தவன் ஆவான். [அல்குர் ஆன் ]

ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

தர்மத்தால் சொர்க்கத்தை வாங்குங்கள்

அல்லாஹ்வின் திருபெயரால் ...
அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ் ]

மனிதனின்  குற்றங்கள் பெரும்பாலானவை  அவனது  நாவிலிருந்து தான் பிறக்கின்றான்.
இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லாத பொழுது உன் கஷ்ட்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும் ?

திங்கள், ஜனவரி 27, 2014

கடன் கொடுப்பதின் சிறப்பு




ஒரு சமயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள் . அவர் வரம்பு மீறி செலவு செய்பவராக இருந்தார். எந்த ஒரு நன்மையான காரியமும் செய்யாமல் இருந்த அவர் மரணம் அடைந்து விட்டார் . அவரிடம் கேள்வி கணக்கு கேட்கப்பட்டது ."ஓ மனிதனே! ஒரு நல்ல காரியமுமா செய்ய வில்லை ?" அதற்கு அவர் "ஆம் , இருந்த போதிலும் நான் எல்லா மக்களுக்கும் கடன் கொடுப்பேன் .

திங்கள், ஜனவரி 13, 2014

உருவ பொம்மைகள் வீட்டில் வைத்திருக்கலாமா?




உயிரினங்களின் உருவச் சிலைகளுக்கும் உருவ பொம்மைகளுக்கும் வித்தியாசமில்லை. வணங்கி வழிபாடு நடத்தினால் அது சிலை; வைத்து விளையாடினால் அது பொம்மை. இங்கு எண்ணம் - நோக்கம் வேறுபடுகின்றது. மரியாதை தரும் வகையில் இருந்தால் அது வணக்கத்தின் துவக்கமாக அமைந்துவிடும். விளையாட்டுப் பொருளாகவோ மிதிபடும் மதிப்பற்ற வகையில் இருந்தாலோ அவை வீட்டில் இருக்கத் தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில், அன்னையர் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களைச் செய்து கொடுத்தனர்.

ஞாயிறு, டிசம்பர் 15, 2013

இன்றே செயல்படுங்கள்!




அண்ணலெம் பெருமானார் (ஸல்) கூறுகிறார்கள் :"ஐந்துக்குமுன் ஐந்தை பாக்கியமாக கருது ! முதுமைக்கு முன் இளமை ,நோயிக்கு முன் உடல் நலம் ,வறுமைக்கு முன் வசதி , பெரும் பாரத்திற்கு  முன் அமைதி, மரணத்திற்கு முன் வாழ்வு !
ஆதாரம்: திர்மிதி)