அண்டை வீட்டார்கள் ......... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அண்டை வீட்டார்கள் ......... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், பிப்ரவரி 09, 2017

நாம் எல்லோரும் ஒரு நல்ல அண்டை வீட்டாராக இருப்போம்!

    நாம் எல்லோரும் ஒரு நல்ல அண்டை வீட்டாராக இருப்போம்!                                                                                                                                                 பக்கது வீட்டில் இருப்பவர்கள் உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் போது, பசியோடு இருக்கும் போது தான் மட்டும் வயிறுபுடைக்க சாப்பிடுவது முஃமினுக்கு அழகல்ல! அண்டைவீட்டில் இருப்பவருக்கு வழங்கிவிட்டு சாப்பிடுவதுதான் இறைநம்பிக்கை உள்ளவனின் செயலாக இருக்கும்.

“தன் அண்டைவீட்டானை விட்டு தான் (மட்டும்) வயிறு நிரம்ப ஒருவன் சாப்பிடமாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உமர் (ரலி),

நூல் : அஹ்மத் (367)


“முஸனத் அபூயஃலா’ என்ற ஹதீஸ் நூலில் அண்டைவீட்டான் பசியோடு இருக்கும் போது வயிறார சாப்பிடுபவன் முஃமின் அல்லன்! என்று நபிகளார் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

புதன், பிப்ரவரி 08, 2017

இறைவனின் அன்புக்கு அழகிய வழி[அண்டை வீட்டார்கள்]



அல்லாஹ்வும் அவன் தூதரும் விரும்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் அண்டைவீட்டாரிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளட்டும் என்றுநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீ குராத் (ரலி), நூல்கள் : ஷுஅபுல் ஈமான்-பைஹகீ (1502), ஹக்குல் ஜார், பக்கம் : 6.

நபிகளாரின் இறுதி அறிவுரை

நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது “நான் அண்டைவீட்டாரிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளவேண்டுமென வலியுறுத்துகிறேன்’ என்று அதிமாக கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி), நூல் : அல்முஃஜமுல் கபீர்-தப்ரானீ, பாகம் : 8, பக்கம் : 111)

செவ்வாய், பிப்ரவரி 07, 2017

அண்டை வீட்டார்கள் .........

அண்டை வீட்டார்கள் .........
மனிதனுக்கு, உறவுகள் அவன் முன்னேறுவதற்கும் மன அறுதல் அடைவதற்கும் மிகப்பெரிய பாலமாக அமைந்துள்ளது. இந்த உறவுகள் இரத்த பந்தத்தின் மூலமும் பழக்கத்தின் மூலமும் ஏற்படுகிறது. இந்த உறவுகளை நல்லமுறையில் கவனித்து வருபவன் இம்மையிலும் மறுமையிலும் நல்லநிலையில் வாழ்வான். இந்த உறவு முறைகளில் அண்டைவீட்டாருடன் ஏற்படும் உறவுகள் மிகமுக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்துள்ளது. இந்த உறவுகள் நமக்கு நல்லமுறையில் அமைய வேண்டும். அதை நல்ல முறையில் பராமரிக்கவும் வேண்டும்.திருக்குர்ஆன் நபிமொழிகளில் அண்டைவீட்டாரின் உரிமைகளும் கடமைகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.