அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

வெள்ளி, மார்ச் 30, 2018

இளைஞர்கள் செல்லும் பாதை எது ?

இளைஞர்கள் செல்லும் பாதை சரியா ?

இளைஞர்கள் செல்லும் பாதை எது ?
மனித வாழ்க்கை மூன்று பருவங்களைக் கொண்டது. பிறந்தவுடன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றான். பால்குடி மறக்கின்ற வரை பெற்றோரை முழுமையாகச் சார்ந்திருக்கின்றான். வளர, வளர விடலைப் பருவம். அதன் பின் எதைப் பற்றியும் கவலைப்படாத, யாரையும் எவரையும் சார்ந்து நிற்காத இளமைப் பருவம். ஒரு நாற்பது வயது வரை அதை அவன் முழுமையாக அனுபவிக்கின்றான்.

ஒரு மனிதன் தான் இளமையான பருவத்தில் தான் தவறிழைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அந்த கால கட்டத்தில் தான் மனிதன் நல்லது, கெட்டது போன்ற பல்வேறு நற்செயல்களையும், தீய பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்தி கொள்கிறான்.


இளைஞர்கள் பருவம்

பலவீனமான நிலையில் உங்களை அல்லாஹ் படைத்தான். பின்னர் பலவீனத்திற்குப் பின் பலத்தை ஏற்படுத்தினான். பின்னர் பலத்துக்குப் பின் பலவீனத்தையும், நரையையும் ஏற்படுத்தினான். அவன் நாடியதைப் படைப்பான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.
(அல்குர் ஆன் 30 : 54)

இளைமை பருவத்தை வணக்கத்தை அல்லாஹ்வுக்காக கழித்த மனிதர்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்’
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : புஹாரி 660

மதுவில் இளைஞர்கள்

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
(அல்குர் ஆன் 5 : 90)

மதுவிலிருந்து விலக கடுமையான எச்சரிக்கை

இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்: யார் மதுவை அருந்துகிறாரோ அவருடைய நாற்பது நாட்கள் தொழுகை நிறைவேறாது. அவர் அதற்காக மன்னிப்பு கேட்டு திரிந்துகிறார். திரும்ப அவர் மதுவை அருந்துகிறார். திரும்ப அல்லாஹ்வுடன் பாவ மன்னிப்பு கேட்கிறார். திரும்ப மூன்றாவது முறையாக மது அருந்துகிறார். திரும்ப பாவ மன்னிப்பு கேட்கிறார். மூன்று தடவைக்கு மேல் நான்காவது முறை மது அருந்தினால் அவருக்காக அல்லாஹ் அம்மனிதருக்கு மறுமையில் ரஹதத்தில் ஹபால் என்ற மதுவை கடமையாக்குகின்றான். உடனே, ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே! ரஹதத்தில் ஹபால் என்றால் என்ன என்று கேட்கின்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அது நரகவாசிகள் சீழும், சிலம்பும் தான் என்று கூறினார்கள்.
(நூல் : இப்னுமாஜா 3337)

ஒரே வசனத்தில் ஒழிக்கப்பட்டது

(மதுபானம் தடைசெய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) பேரிச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும். (மதுபானம் தடைசெய்யப்பட்ட நாளில்) நான் அபூ தல்ஹா(ரலி) அவர்களின் வீட்டில் (அங்கிருந்த) மக்களுக்கு மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது மது விலக்கிற்கான இறைவசனம் அருளப்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு (மது தடைசெய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க) பொது அறிவிப்புச் செய்யும்படி உத்திரவிட்டார்கள். அவர் அவ்வாறே அறிவித்தார். இதைக் கேட்டதும் அபூ தல்ஹா(ரலி), ‘வெளியே போய் இது என்ன சப்தம் என்று பார்(த்து வா)’ எனக் கூறினார்கள்.

உடனே நான் வெளியே சென்றேன். (பார்த்துவிட்டுத் திரும்பி வந்து), ‘இதோ பொது அறிவிப்புச் செய்பவர், (மக்களே!) எச்சரிக்கை! மதுபானம் தடைசெய்யப்பட்டுவிட்டது என்று அறிவித்தார்’ என்று சொன்னேன். அதற்கு அபூ தல்ஹா(ரலி) என்னிடம்,’நீ போய், இதைக் கொட்டிவிடு!’ என்று கூறினார்கள். (மக்கள் மதுவைத் தரையில் கொட்ட) அது மதீனாவின் தெருக்களில் ஓடியது. அந்த நாளில் அவர்களின் மதுபானம் (பழுக்காத) பேரிச்சங்காய் மதுவாக இருந்தது. அப்போது மக்களில் சிலர், ‘(உஹுதுப் போரில்) ஒரு கூட்டத்தார் தம் வயிறுகளில் மது இருக்கக் கொல்லப்பட்டார்களே!’ என்று கூறினார். அப்போதுதான் ‘இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில் ) எதையேனும் (தடைசெய்யப்படுவதற்கு முன்னர்) உட்கொண்டிருந்தால் அவர்களின் மீது (அது) குற்றமாகாது.’ எனும் (திருக்குர்ஆன் 05:93 வது இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி), நூல் : புகாரி 4620

உலக வாழ்கை திருப்பி விட வேண்டாம்

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உ

2 கருத்துகள்:

  1. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    பதிலளிநீக்கு

Welcome to your comment!