அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

சனி, ஜனவரி 13, 2018

வாழ்க்கை துணை அமைவது எப்படி?

வாழ்க்கை துணை அமைவது எப்படி?
நல்ல  ஆண்களுக்கு ,மனைவி சரியாக அமைவதில்லை ,,நல்ல பெண்களுக்கு  கணவன் சரியாக அமைவதில்லை  எல்லாம் விதிப்படிதான் எல்லாம்,ஆனால் இதில் இறைவன் சொல்லும் கோட்பாடு  என்ன? விளக்கம்  தாருங்கள்?

🌿பதில்🌿

   கணவன்,மனைவி உறவில் நல்ல ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரியான மனவாழ்க்கை அமைவதில்லை என்று கூற இயலாது. சில இடங்களில் இவ்வாறாக அமையலாம். இது அடிப்படையிலேயே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்.

   கணவன், மனைவி உறவை பொறுத்தவரை இஸ்லாம் வகுத்த வரையறைக்குள் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தேர்ந்தெடுக்கலாம்.



அவ்வாறு தேர்ந்தெடுக்கும்போது அந்த பெண்ணோ? ஆணோ? அழகுக்காகவோ,செல்வத்துக்காகவோ,குலத்திற்காகவோ இல்லாமல் மார்க்கப்பற்றுள்ளவர்களை தேர்ந்தெடுத்தாலே பெரும்பாலான குடும்பப்பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்தபடி தேர்ந்தெடுத்தாலே ஒருவருகொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்து புரிதலில் விரிசல் இல்லாது பார்த்துக்கொள்ளலாம்.

ஆனாலும் ஒரு ஆணின் விலா எலும்பிலிருந்துதான் அல்லாஹ் அவன் மனைவியை படைக்கிறான்.
இது விதியின் அடிப்படையில் தான் நடக்கிறது.
இதில் இருவரும் விட்டுக்கொடுத்து, ஒருவர் மற்றொருவரை புரிந்தாலே வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

அதையும் மீறி நல்ல கணவனோ, மனைவியோ அமையவில்லை எனில் இதில்தான்  அல்லாஹ் சோதனை வைத்திருக்ககூடும். அந்த சோதனையை பொறுமையாக வென்றால் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறலாம். *எனவே, பொறுமை காப்பது அவசியம். வாழ்வு இறுதிவரை அப்படியே இருந்துவிடாது. பொறுமையின் காரணம் நிச்சயம் நல்ல மாற்றத்தை நாளடைவில் ஏற்படுத்தும்*

பொறுக்கமுடியாத சோதனையாக மணவாழ்க்கை அமைந்தால்,அல்லாஹ் அதற்கும் ஒரு வழி கற்றுத்தந்துள்ளான்.
அவர்களை விலக்கும் உரிமை உண்டு. இறுதுவரை இன்னல்பட்டுக் கொண்டே வாழ அவசியமில்லை. விலகி வந்து நமக்கு பிடித்த இன்னொரு வாழ்க்கயை இஸ்லாம் கூறிய வரையறைக்குள் தேர்ந்தெடுக்கலாம்.

விதியை பொறுத்தவரை அல்லாஹ்தான் ஏற்படுத்தினான் ஆனாலும் வாழ்க்கையின் எல்லாவற்றிற்கும் விதியின் மீது பழிபோட்டு உட்காரமுடியாது.

உதாரணமாக, ஒரு ஆசிரியர் மாணவருக்கு எல்லாம் கற்றுத்தருகிறார். நன்றாக படிக்கும் மாணவன் தேர்வில் வெற்றிபெற்று அடுத்த வகுப்புக்கு போவான் என அந்த ஆசிரியருக்கு நன்றாக தெரியும்.
அதேபோல் நன்றாக படிக்காத மாணவன் தோல்வி அடைவான் என்றும் அவருக்கு தெரியும்.
ஆனாலும் அவன் தேர்வெழுதிதான் தீரவேண்டும்.

அதுபோல்தான் அல்லாஹ் அனைத்தையும் கற்றுத்தந்துள்ளான். அவன் ஏற்கனவே விதித்தும் விட்டான், “யார் நேர்வழி பெற்றவர்கள் என்று” அவர்கள் அதை அடைவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறார்கள்.

விதியை பொறுத்த வரை பல ஆராய்ச்சிகள் பல அறிஞர்களிடம் நடந்து கொண்டுதான் இருக்கும். நமக்கு கொடுக்கப்பட்ட அறிவில் பெரிய அளவில் இதை கூற முடியாது. இறைவனிடம் உள்ள மறைவான ஞானங்களில் இதுவும் ஒன்று.
*விதியை பற்றிய அறிவு முழுமையாக மனிதர்களுக்கு கொடுக்கப்படவில்லை.*

*இது போன்ற சோதனைகளுக்கு வாழ்வில் விரக்தியோ, வெறுப்போ அடையாமல்  தொடர்ந்து இறைவனிடம் பிரார்த்தித்து,* *பொறுமையை கடைபிடித்து, கிடைக்காதவற்றை* *எண்ணி வருந்தாமல*்
*கிடைத்தவற்றில் நிம்மதி அடைந்து,அடுத்தவர்களை ஒப்பிடாமல் இருந்து விட்டுக்கொடுத்து,* *அல்லாஹ்விடம் அனைத்தையும் ஒப்படைத்து விட்டாலே இப்படியான எண்ணங்கள் வராமல் தடுக்கலாம்*

📚📖ஆதாரங்கள்

📓

قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ  ﴿9:51﴾
9:51. “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!

📓

الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ ۚ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ ۚ وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ ۖ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا  ﴿4:34﴾
4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்…..

📓இம்ரான்பின்ஹுஸைன் (ரலி)  அவர்கள்கூறுகிறார்கள் :

ஒருமனிதர் “அல்லாஹ்வின்தூதரே!சொர்க்கவாசிகள்யார்?நரகவாசிகள்யார்? என்று(முன்பேஅல்லாஹ்வுக்குத்)தெரியுமா?” எனக்கேட்டார். நபி(ஸல்) அவர்கள் “ஆம் (தெரியும்)”என்றுசொன்னார்கள். அவர்”அவ்வாறாயின்ஏன்நற்செயல்புரிகின்றவர்கள்நற்செயல்புரியவேண்டும்?” என்றுகேட்டார். நபி (ஸல்)அவர்கள் “ஒவ்வொருவரும்”எ(தைஅடைவ)தற்காகப்படைக்கப்பட்டார்களோ’ அல்லது”எ(தைஅடைவ)தற்குவாய்ப்பளிக்கப்பட்டார்களோ’அதற்காகச்செயல்படுகிறார்கள்”என்றுபதிலளித்தார்கள்.

நூல் : புகாரி (6596)

📓மனிதர்களுடையஅநீதியின்காரணமாகஅவர்களைஅல்லாஹ்தண்டிப்பதாகஇருந்தால்பூமியில்எந்தஉயிரினத்தையும்அவன்விட்டுவைக்கமாட்டான்.மாறாககுறிப்பிட்டகாலக்கெடுவரைஅவர்களைப்பிற்படுத்தியிருக்கிறான்.அவர்களின்கெடுவந்ததும்சிறிதுநேரம்பிந்தவும்மாட்டார்கள்.முந்தவும்மாட்டார்கள்.

அல்குர்ஆன்16 : 61)

📙 وَمَا أَرْسَلْنَا قَبْلَكَ مِنَ الْمُرْسَلِينَ إِلَّا إِنَّهُمْ لَيَأْكُلُونَ الطَّعَامَ وَيَمْشُونَ فِي الْأَسْوَاقِ ۗ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً أَتَصْبِرُونَ ۗ وَكَانَ رَبُّكَ بَصِيرًا

20. (முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்போராகவும், கடை வீதிகளில் நடமாடுவோராகவுமே அனுப்பினோம். பொறுமையைக் கடைப்பிடிக்கிறீர்களா? (என்பதைச் சோதிக்க) உங்களில் சிலரை, சிலருக்குச் சோதனையாக484 ஆக்கினோம். உமது இறைவன் பார்ப்பவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன்  25:20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!